Skip to main content

முதலில் உங்களைப் பரிசோதனை செய்து கொண்டீர்களா? கரோனா தொற்றால் பதற்றமான திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர்! 

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

dmk

 

கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்பழகனின் மரணம் தந்த எச்சரிக்கையினால் கரோனாவின் தீவிரத்தைப் பலரும் இப்போது உணர்ந்திருக்கும் வேளையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பழனிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இந்நிலையில், ரிஷிவந்தியம் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயனின் மனைவி மற்றும் எட்டு வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

 

இது குறித்து கார்த்திகேயனிடம் நலம் விசாரிப்பதற்காக கட்சித் தொண்டர்கள் பலரும் அவரை போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், "நான் நலமாக உள்ளேன். எனது மனைவியும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. அவர்கள் மருத்துவமனையில் உள்ளார்கள். நானும் எனது குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்களும் நலமாக உள்ளோம். நண்பர்களும், கழக தோழர்களும், நிர்வாகிகளும் என்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள் என்பதை நானறிவேன். தயவுசெய்து என்னை தொலைபேசியில் தொடர்புகொள்வதை ஒரு சில நாட்கள் தவிர்க்கவும். என்றென்றும் மக்கள் பணியில் வசந்தம் க.கார்த்திகேயன், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்''’ என வாட்ஸ்அப் குழு மூலம் பதில் அளித்துள்ளார்.

 

கார்த்திகேயன் தன் மனைவி மகள் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு திருவையாறில் நடந்த உறவினர் திருமணத்திற்குச் சென்று வந்திருந்தார். அதன்மூலம் அவர் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், 'ஒன்றிணைவோம்' திட்டத்தின்படி கட்சித் தலைமைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அனுப்பியிருந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் எம்.எல்.ஏ.-க்கள் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவித் திருந்தார்.

 

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி, சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். அவர்களைப் பார்த்த ஆட்சியர் குராலா மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணியிடம், உமது சகோதரர் கதிரவனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார். உங்கள் வீடு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் மனு கொடுக்க வந்துள்ளீர்கள். முதலில் உங்களைப் பரிசோதனை செய்து கொண்டீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

 

அதற்கு மா.செ. அங்கயற்கண்ணி, "எனது குடும்பத்தினர் சகோதரர் அனைவரும் சங்கராபுரத்தில் உள்ளனர். நான் எனது உறவினர் எம்.எல்.ஏ உதயசூரியன் வீட்டில் வடக்க நந்தலில் தங்கியுள்ளேன். சொந்த ஊருக்குச் செல்லவில்லை'' என்று பதில் கூறியுள்ளார்.

 

அதன்பிறகு அவர்களிடம் மனு வாங்கிய மாவட்ட ஆட்சியர், "எதற்கும் நீங்கள் பரிசோதனை செய்துகொள்வது நல்லது'' என்று கூறி அனுப்பி உள்ளார். அப்போதுதான் மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணியின் குடும்பத்தில் அவரது சகோதரருக்குத் தொற்று இருப்பதே மற்றவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

 

அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகும் போது பொதுமக்களை ஒரு இடத்தில் கும்பலாகக் கூட்டி வைத்துக்கொண்டு நிவாரணம் வழங்குவதன் மூலம் நோய்த் தொற்று பரவும். எனவே நிவாரணம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்கள் மூலம் வீட்டுக்கு வீடு தனித்தனியாகக் கொண்டுசென்று கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது யார் கொடுத்தது? எந்த அமைப்பு கொடுத்தது என்று மக்களிடம் எடுத்துக்கூறி கொடுத்தால் போதும். அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

 

தேர்தலின்போது அரசியல் கட்சிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் வீடு வீடாகச் சென்று ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்க வில்லையா? பணம் கொடுத்தவர்களுக்கு மக்கள் விசுவாசமாக ஓட்டு அளித்து ஜெயிக்க வைத்துள்ளார்கள். இப்போது நிவாரணம் கொடுக்கும்போது மட்டும் ஏன் கும்பல் கூட்ட வேண்டும். 

 

உயர்நீதிமன்ற உத்தரவிலும் நிவாரணம் கொடுக்கும் போது கூட்டம் போடக்கூடாது என்று பல்வேறு விதிமுறைகளைக் கூறியுள்ளது. ஆனால் அதையெல்லாம் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் பெரிதுபடுத்தாமல் மக்களைக் கூட்டி வைத்துக்கொண்டு நிவாரணம் கொடுத்ததின் விளைவுதான் அன்பழகன் எம்.எல்.ஏ. உயிர் போனது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 

http://onelink.to/nknapp

 

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தினால்தான் தொடர்ந்து அரசியல் கட்சி வி.ஐ.பி.-களை கரோனா துரத்துகிறது. இனியாவது இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்