ADVERTISEMENT

இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை பார்க்க வேண்டாம்!எச்.ராஜா அதிரடி பேச்சு!

11:54 AM Jul 30, 2019 | Anonymous (not verified)

ராஜராஜ சோழன் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கும்பகோணம் அருகே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கைது ஆகாமல் இருக்க முன் ஜாமின் பெற்றார் ரஞ்சித். இந்த வழக்கு விசாரணையில் இது போன்று பேசவேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி பா.ரஞ்சித்தை எச்சரித்தார். மேலும், திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் மூன்று நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி, காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இவருடைய நோக்கம் எல்லாம் எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், அதுக்காகத்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். மேலும் மதம் மாற்றும் ஒரு சில தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவர் பேசுவதில் உள்நோக்கம் கொண்ட பொய் உள்ளது என்று கூறினார். அதனால், ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம். அவரது படங்களை புறக்கணித்து அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்" என்று எச்.ராஜா பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT