“நன்றி மீண்டும் வராதீர்கள்” - கூட்டணி முறிவு குறித்து அதிமுக

Don't come again thanks AIADMK on alliance break

பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால் அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில்,பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாகத்தீர்மானிக்கப்படுகிறது. நன்றி மீண்டும் வராதீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

admk Alliance
இதையும் படியுங்கள்
Subscribe