'அரசின் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் எண் இருக்கும் பொழுது 'மக்கள் ஐடி திட்டம்' தேவையா?' என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன் வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா? மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் எண் இருக்கும்பொழுது மக்கள் ஐடி திட்டம்எதற்காக. தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்த பிறகு மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார்.