Advertisment

''நீட் தேர்வின் வரலாறு தெரியுமா? எங்களுக்கு உடன்பாடு இல்லை'-பாஜக வானதி ஸ்ரீனிவாசன் வெளிநடப்பு!

'' Do you know the history of the NEET exam? We do not agree '- BJP Vanathi Srinivasan walkout!

Advertisment

கடந்த 6 ஆம் தேதி பேரவையில் பேசிய முதல்வர், ''நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மருத்துவத்துறையில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாக உள்ளது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிடுகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை மறுநாள் 8/1/2022 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து நீட்டுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்'' என்று கூறியிருந்தார்.

அறிவிப்பின்படி இன்று 8/1/2022 நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன்ஆகியோர் பங்கேற்ற நிலையில் பாஜக சார்பில் வந்திருந்த வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

Advertisment

'' Do you know the history of the NEET exam? We do not agree '- BJP Vanathi Srinivasan walkout!

BJP

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் பாஜக சார்பில் கலந்துகொண்டு எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தேன். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் எங்களுக்கு (பாஜக) உடன்பாடு இல்லை. ஒன்றிய அரசால் மாநில அரசின் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வு என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த நீட் தேர்வு வந்த வரலாறு பலமுறை ஆண்டுக்கணக்காக இங்கு விவாதிக்கப்பட்ட ஒன்று. இது ஏதோ பாஜக செயல்திட்டத்தின் கீழ் உருவான தேர்வு இல்லை. காங்கிரஸ்- திமுக கூட்டணியில்தான் கொண்டுவரப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் நாடுமுழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும் நூறு சதவிகிதம் உண்மைக்குப் புறம்பானது. அதிலும் எங்களுக்கு ஏற்பு இல்லை'' என்றார்.

TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe