Advertisment

கவலை வேண்டாம்... தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

தேர்தல் தோல்வியை கண்டு துவள வேண்டாம் என்றும், மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அதில். தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும்போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும்போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும்.

Ramadoss

தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.

நடப்பு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்? என்று தெரியவில்லை.

மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே, தங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத தி.மு.க., இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்?. அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கிவிடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம்.

இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். பாட்டாளிகளாகிய நீங்கள் வீறு கொண்டு எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம். கவலை வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.

pmk loksabha election2019 results Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe