Advertisment

''தமிழக டிஜிபி கையில் காவல்துறை இல்லை... எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்'' - பாஜக அண்ணாமலை!

'' Tamil Nadu DGP has no police in hand; do not test our patience '' - BJP Annamalai!

Advertisment

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான நிலையில், ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லிங்டன் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ''இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்போது முப்படை தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது'' என நேற்று (10.12.2021) குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த தமிழ்நாடு டிஜிபி தெரிவித்திருந்தார்.

'' Tamil Nadu DGP has no police in hand; do not test our patience '' - BJP Annamalai!

Advertisment

இந்நிலையில்தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளததாவது, ''தமிழக காவல்துறை தமிழக டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை. டிஜிபியின் கையிலிருந்து காவல்துறை நழுவிவிட்டது. ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறானகருத்துகளைப் பேசியவர்கள் மீது நடவடிக்கை தேவை. 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம் என்று திரும்பக்கூற விரும்பவில்லை. எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்'' என்றார்.

''பிஜேபியை எவ்வாறு ஹேண்டில் செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். தொட்டுப் பார்க்கட்டும். 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம். மோடிஜி டெல்லியில் இருக்காரு. தொடுவார்கள் என்று காத்திருக்கிறோம். தொட்டுப் பார்க்கட்டும். திமுக, பாஜக மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்'' என அக்டோபர் மாதம் 28ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

helicopter nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe