Advertisment

“சுயேட்சையாக நிற்பவர்களை ஆதரிக்காதீர்கள்..” - திருநாவுக்கரசு எம்.பி.

Advertisment

publive-image

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புத்தூர் நால்ரோடு, உறையூர், குறத்தெரு உள்ளிட்ட வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல் எப்படி முக்கியமோ அதே போல், இந்த கவுன்சிலர் தேர்தலும் முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் திமுக கட்சி தான். கூட்டணி கட்சிகளுக்கு தலைமை தாங்கும் கட்சியாக திமுக இருக்கிறது. கூட்டணி பேசும்போது மட்டும் தான் நாம் வேற வேற கட்சிகள். கூட்டணி முடிந்து களத்தில் வந்துவிட்டால் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒரே கட்சி தான்; எல்லா வேட்பாளர்களும் நமக்கு ஒன்றுதான். எனவே கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெற செய்ய வேண்டும். சுயேட்சையாக நிற்பவர்களை ஆதரிக்காதீர்கள் நம்முடைய கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றால் ஏராளமான நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்” என்றார்.

thirunavukarasu trichy
இதையும் படியுங்கள்
Subscribe