Advertisment

''எங்கள் பிள்ளைகளை தவறாக வழிநடத்தாதீர்கள்'' -கமலுக்கு மூ.ராஜேஸ்வரிபிரியா கடும் கண்டனம்!

'' Do not mislead our children '' - M. Rajeswari Priya strongly condemns Kamal!

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தைச் சீரழிப்பதாக முன்னதாகவே பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். அதிலும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இது தொடர்பாக போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

இதுபற்றி ராஜேஷ்பிரியா கூறியுள்ளதாவது, ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் நேற்று பேசிய கருத்தை எதிர்த்து பல பெண்கள் எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி என்று தொடர்ச்சியாக போராடி வருகிறேன்‌.

Advertisment

'' Do not mislead our children '' - M. Rajeswari Priya strongly condemns Kamal!

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அவர்கள் "அப்பா மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது அருவருக்கதக்க விஷயம்" என்று பேசியுள்ளார் . இந்த கருத்து எத்தனை பெண்களை சென்றடைந்திருக்குமோ ...?

தயவுசெய்து எந்த பெண்ணும் இது போன்று கூலிக்கு மாரடிப்பவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதீர்கள். இது போன்று பேசுவதனை நிறுத்தி கொள்ளுங்கள் கமல் சார்.

பெற்றோருக்கு என்னவிதமான பொறுப்புகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதனை நீங்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்தில் நீங்கள் இருக்கலாம்‌. உங்கள் நிகழ்ச்சியினை பார்க்கும் எங்கள் பிள்ளைகளை தவறாக வழி நடத்துவதை விட்டுவிடுங்கள். பிக் பாஸ் கேடு கெட்ட நிகழ்ச்சி ஒழிக்கப்பட வேண்டும். சின்னத்திரைக்கு தணிக்கை குழு வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

big boss rajarajeswari kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe