எச்.ராஜாவை புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது - சி.பி.ஐ. தீர்மானம் 

raja

புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் தோழர் ராசேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாதவன் வரவேற்றார். மாநிலக்குழு செங்கோடன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 28 முதல் 31 ந் தேதி வரை மன்னார்குடியில் நடக்கும் மாநில மாநாட்டிற்று 3 ஆயிரம் தோழர்களுடன் கலந்து கொள்வது, பொது தேர்வுகள் தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் நிலவி வரும் குடிதண்ணா தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடைகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும்,

புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் வறட்சியாக இருப்பதால் 100 நாள் வேலை திட்டதை அதிகப்படுத்த வேண்டும்,

திரிபுராவில் மாவீரன் லெனின் சிலையை அகற்றிய பா.ஜக வை கண்டிப்பதுடன் அந்த சிலையை அகற்றியதை ஆதரித்தும் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என்றும் சொல்லி, எச்.ராஜா செல்லும் இடங்களில் எல்லாம் கலவரத்தை தூண்டி வருகிறார். அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறை அனுமதி அளிக்க கூடாது. கலவரத்தை தூண்டும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

CBI Conclusion District H Raja Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe