Advertisment

எப்போதும் உங்கள் பக்கம் நிற்போம்... ஊராட்சி மன்ற தலைவிக்கு திமுக அளித்த உறுதி...

DMK's assurance to the Panchayat President ...

background:white">கோவை சூலூர் சுல்தான் பேட்டை ஒன்றியம் ஜெ. கிருஷ்ணாபுரம், பொள்ளாச்சி ஊராட்சி மன்ற தலைவியாக ஆனவர் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த சரீதா.இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சரிதா ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்துஅந்த ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தஅதிமுக பிரமுகர் உசிலை பாலசுப்பிரமணியன் என்பவர் ஊராட்சி அலுவலகத்தில் சரிதா இருக்கும்போது, அங்கு சென்று சாதியை சொல்லி இழிவாக பேசி ’நீயெல்லாம் இருக்கையில் அமரக் கூடாது நான் வரும்போது எழுந்து நிற்கவேண்டும்’ என்று தொடர்ந்து மிரட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார் என கூறப்படுகிறது.

Advertisment

background:white">மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளும் வெளியேயும் ஊராட்சி மன்ற தலைவர் என்று சரிதவின் பெயரை எழுதக்கூடாது என்று மிரட்டி தடுத்து வந்துள்ளார். இதனால் இதுவரை ஊராட்சி பெயர் பலகையில் தலைவர் சரிதவின் பெயரை எழுத முடியவில்லை.

Advertisment

background:white">தொடர்ந்து உசிலை பாலசுப்பிரமணியன் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்துபோன ஊராட்சி தலைவர் சரிதா, நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துவிட்டு நெகமம் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

background:white">இதனை தொடர்ந்து பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் அதிமுக பிரமுகர் உசிலை பாலசுப்பிரமணியன் மீது கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

background:white">திமுக ஊராட்சி மன்றதலைவரை மிரட்டிய தகவல் அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, சரீதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். திமுக எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும் என உறுதி அளித்தார்.

panchayat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe