Advertisment

திமுக, காங்கிரஸ் கூட்டணி குழப்பமும், விளக்கமும்!

தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதியில் நன்றி தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, எம்.பி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றுள்ளேன் என திருநாவுக்கரசு கூறியதாக சொல்லப்பட்டது.

Advertisment

dmk

இது திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் திருச்சி எம்பியாக பதவியேற்றதற்கு தனது செல்வாக்குதான் காரணம் என திருநாவுக்கரசர் கூறியது தான் திமுகவின் அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதன் வெளிப்பாடாக தான் கே.என்.நேரு, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு திமுக பல்லக்கு தூக்குவது என பேசினார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் பேச்சுதான் காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசு,எம்.பி. இது பற்றி பேசும் போது, நான் எனக்கு இருக்கும் செல்வாக்கால் தான் வெற்றி பெற்றேன் என்று எங்கேயும் கூறவில்லை. மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.

Advertisment
congress stalin thirunavukkarasu trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe