மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 105 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. கர்நாடகாவில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் திமுக நாடாளுமன்ற தேர்தலிலும்,இடைத்தேர்தலில் முன்னிலை பெற்று வருகிறது.
திமுக,பாஜகவுக்கு சாதகமாக முதல் சுற்று முடிவுகள்!
Advertisment