Udhayanidhi Stalin

Advertisment

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்'' என்று அறிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin

Advertisment

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 3 மணி அளவில் அறிவிக்கப்படுகிறார் என்று நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல் மாலை 3 மணிக்கு திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உதயநிதி இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதன் பிறகு அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு இளைஞர் அணிக்காக தேனாம்பேட்டையில் கட்டப்பட்டுள்ள அன்பகத்துக்கு சென்று பணியை தொடங்குகிறார். கட்சி மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார்.