திமுகமுன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று (07.08.2021) அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், அண்ணா அறிவாலயத்திலும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், திமுக மகளிர் அணியின் புதிய இலச்சினையும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.