மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் அமைதி பேரணி சென்றனர். சேப்பாக்கத்தில் துவங்கிய இப்பேரணி மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் நிறைவு பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது மழை பெய்யத்தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மகளிரணியினர் அமைதியாக பேரணி சென்றனர்.
கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது அழுத மகளிரணியினரை கனிமொழி ஆறுதல் கூறி தேற்றினார்.