Advertisment

திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க பாஜக போட்ட ப்ளான்! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வியை சந்தித்தது. திமுக கூட்டணி தமிழக்தில் 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தேர்தல் தற்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக சார்பாக கதிர் ஆனந்தும், அதிமுக சார்பாக ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். மேலும் 37 இடங்களை வென்ற திமுக வேலூர் தேர்தலிலும் வெற்றி பெற்றால் தான் மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற முடியும் என்று தீவிரமாக களத்தில் இறங்கி விட்டனர்.

Advertisment

bjp

அதற்காக தேர்தல் பணியாளர்களையும் நியமித்து விட்டனர். இந்த நிலையில் அதிமுக இன்னும் வேலூர் தொகுதிக்கான தேர்தல் வேலையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் படு தோல்வியை சந்தித்தது பாஜக தலைமைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக சொல்கின்றனர். இதனால் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற பாஜக தலைமை ஒரு சில வியூகங்களை வகுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதில் பணத்தையும், அதிகாரத்தையும் இந்த தேர்தலில் பயன்படுத்தி எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தலைமை திட்டம் போட்டதாகதெரிவிக்கின்றனர். இதனால் பிரதமர் தமிழகம் வரும் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், வேலூர் தொகுதி தேர்தல் பணிகளை குறித்தும் முதல்வர் எடப்பாடியிடமும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடமும் பேச இருப்பதாக கூறுகின்றனர்.

eps ops modi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe