Advertisment

“கோவையை திமுக கைப்பற்றும்.. நாங்கள் ஆளும் கட்சி..” - கே.என்.நேரு 

publive-image

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் மிக ஆர்வமுடன் வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் திமுகவின் முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேரு தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

Advertisment

அதன்பின் செய்தியாளர்களைச்சந்தித்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் தொடர்ந்து தேர்தல் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அவர் குற்றம் சொல்வதால் தான் முன்னாள் முதல்வர் இல்லை என்றால் அவர் தற்போது முதல்வராக இருந்திருப்பார். கோவை மற்றும் கரூர் மாவட்டங்களை குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.

Advertisment

கோவையில் இந்த முறை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கைப்பற்றும். நாங்கள் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் எங்களுடைய பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறோம். கடந்த முறை திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கொடுக்கையில் நான் முதலமைச்சராக இருப்பதால் அந்த மனு என்னிடம் தானே வரவேண்டும் என்று கூறியவர் எடப்பாடி. தற்போது இது சரியில்லை அது சரியில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது 16 இடங்களை தக்க வைத்த நாங்கள் இந்த முறை மாநகராட்சியை கைப்பற்றுவோம்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe