DMK will be a huge success! Rajendran MLA hopes !!

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இன்று காலை 7:15 மணி அளவில் சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

Advertisment

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;“தமிழக மக்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.அதிமுக தலைவர் பழனிசாமி மற்றும் அக்கட்சியினர் சேலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் வழங்கியது போல டோக்கன் வழங்கி வருகின்றனர்.

Advertisment

DMK will be a huge success! Rajendran MLA hopes !!

தேர்தல் முடிந்த பிறகு அந்த டோக்கன்களுக்கு பணமும், மளிகைப் பொருள்களும் வழங்குவதாக கூறி டோக்கன்களை விநியோகம் செய்துள்ளனர்.எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.அதிமுகவினர் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மக்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, திமுகவை வெற்றி பெறச் செய்வார்கள்” இவ்வாறு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்