சமீப காலமாக தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் போக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றனர். அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனை சேர்க்க எடப்பாடி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டுவருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். இதனையறிந்த திமுகவினர் செந்தில்பாலாஜி மற்றும் கலைராஜன் மூலம் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

Advertisment

thangatamilselvan

தேனி மாவட்டத்தில் நிர்வாகிகளுடனும், மக்கள் செல்வாக்கும் அதிகமாக தங்க தமிழ்செல்வனுக்கு இருப்பதால் ஓபிஎஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்வதற்கு தங்க தமிழ்செல்வன் சரியாக இருப்பார் என்று திமுக கருதுவதால் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிகின்றனர்.திமுகவிற்கு தங்க தமிழ்செல்வன் வருவதற்கு ஒரு சில டிமாண்ட் வைப்பதாக சொல்கின்றனர். அதாவது செந்தில்பாலாஜிக்கு கொடுத்த பதவி போல் தனக்கும் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது. திமுக தரப்பும் தங்க தமிழ்செல்வனின் டிமாண்டை செய்து தர ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.