dmk volunteers welcomes mk stalin

திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை, திமுக தலைவர்மு.க.ஸ்டாலின், தன்னுடைய தந்தை கலைஞரின் தொகுதியான திருவாரூரில், இன்று மாலை 5 மணி அளவில் துவக்க உள்ளார். இன்று காலை, திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சென்னையிலிருந்து குடும்பத்தோடு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

Advertisment

அவரை வரவேற்க திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, திருவெறும்பூர் வேட்பாளர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சமத் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைவரவேற்றனர்.

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னதாக காரில் ஏறிச் சென்ற பின், ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின், செல்வி முரசொலி, துர்கா ஸ்டாலின் தங்கையான ஜெயந்தி ஆகியோர் வந்தனர். இவர்களை திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என் நேரு புடவைகளை பரிசாக வழங்கி வரவேற்றார். திமுக பொதுக் குழு உறுப்பினரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினரானஅன்பில் பெரியசாமியும் வரவேற்றார்.