Skip to main content

எ.வ.வேலுவுக்கு திமுகவில் புதிய பதவி? திமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் சீனியர்களில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
 

dmk



இதனால் தற்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவராக உள்ள கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலுவிற்கு இணைப் பொது செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர. இதே போல் திமுகவில் இருக்கும் சீனியரான எ.வ.வேலுவுக்கும் திமுகவில் முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என்று கூறிவருகின்றனர். அதில் எ.வ.வேலுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதை திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது குறித்து திமுக தரப்பிடம் எந்த ஒரு அதிகார தகவலும் வெளிவரவில்லை. சமீப காலமாக திமுகவில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருவதால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.