தி.மு.க. தலைவர் கலைஞரின் 97 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், கரோனா நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
விருகம்பாக்கம் பகுதியில் உள்ள 2,000 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. விருகை சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தி.மு.க. இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகோண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதேபோல், சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதை மேற்குப் பகுதியில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் கோவில் அர்ச்சகர்கள், கிருஸ்தவப் பாதிரியார்கள், இஸ்லாம் உலமாக்களுக்கு அரிசி, காய்கறி, புத்தாடை உட்பட நிவாரணப் பொருட்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மூன்று சக்கர பைக், பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.