தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சியின் தலைவர்களும்அவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கிழக்கு அபிராமபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.