DMK Triple Celebration AWARDS ANNOUNCEMENT

Advertisment

திமுகவின் முப்பெரும் விழா குறித்தும், விருது பெறுபவர்கள் குறித்தும் திமுக அறிவித்துள்ளது.

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா, திமுக பவள விழா ஆண்டு என முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், “ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.