முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தது பற்றி விளக்கம் தருமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடிய நிலையில் சபாநாயகர் 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதோடு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான நீதிமன்ற உத்தரவின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.