திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை சந்திக்க திமுக சார்பில் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் இணைந்து பூத் கமிட்டி அமைக்கும் வேலையை விரைவுபடுத்தி இருக்கிறார்கள். இதற்காக இரண்டு மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நிலையூர் 100 நபர் கொண்ட பூத் கமிட்டியை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளர் மருதுபாண்டி, வண்டியூர் பகுதி செயலாளர் பாண்டிய ராஜன் மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜி.எல்.ரேணுகாஈஸ்வரி, மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் கதிரவன் மற்றும் திமுக முன்னணி பிரமுகர்கள் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் திமுக தீவிரம்!
Advertisment