நாகை மாவட்டம் பொறையாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

dmk tamilan prasanna

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவா அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமையா என்ற கேள்வி எழுகிறது. அவர் ரஜினியையும் ஆதரிக்கிறார் பொன். ராதாகிருஷ்ணனையும் ஆதரிக்கிறார். இந்த அதிமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். பின்னர் அவர் சிவகாசி மக்களாலேயே அடித்து விரட்டப்படுவார். அவ்வாறு அடித்து விரட்டப்படும்போது அவர் உடனடியாக பாஜகவில் சேருவதற்காக துண்டுபோடுகிறார்.

இதேபோல் ரஜினிக்கு என்ஆர்சி, என்பிஆர் குறித்த புரிதலே இல்லை. ரஜினிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. கொள்கையை கேட்டால் தலை சுத்துகிறது என்கிறார். பைத்தியங்களுக்குத்தான் தலை சுற்றும் ரஜினிக்கு தற்போது தலை சுற்றுகிறது" என தெரிவித்தார்.