பாஜகவிடம் ஐந்து கேபினட் அமைச்சர் கேட்டு திமுக பேசி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக எப்போதுமே சந்தர்பப்பவாத கட்சி. முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் இருந்தே நடந்த அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு இதை அறியலாம். ஒரே நேரத்தில் இரு படகுகளில் பயணிப்பவர்கள் திமுகவினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவசர நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்துவிட்டு, அதன் பின்னர் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.
3வது அணிக்கு மட்டும் அல்ல. டெல்லிக்கு தூதுவிட்டு 5 கேபினட் அமைச்சர் வேண்டும் என்று பாஜகவுடன் அவர்கள் பேசி வருகின்றனர். எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});