rajinikanth

இளைஞரணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட போதும், கடந்த மார்ச்சில் ஸ்டாலினின் பிறந்த நாளின் போதும் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லவில்லை நடிகர் ரஜினி. ஆனால், திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துசொல்லியிருக்கிறார். இந்த வாழ்த்தினை முரசொலியில் பிரசுரிக்கசொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

Advertisment

இந்த நிலையில், ரஜினியை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். அப்போது, திமுகவிற்காக தமிழகத்தில் தான் எடுத்துள்ள சர்வேக்களின் முடிவுகளை ரஜினியிடம் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனை கேட்டு, அப்படியாஎன ரஜினி கேட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment