Advertisment

திமுகவுடன் பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்? யார்? பட்டியலுடன் எடப்பாடி...

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று ஸ்டாலின் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தது இடைத்தேர்தல் முடிவுகளைத்தான். கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டும், இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை நழுவவிட்டதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை.

Advertisment

மத்தியில் பாஜக மீண்டும் வலிமையாக அமர்ந்துவிட்டதால் எடப்பாடி பழனிசாமி அரசை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாதோ என்ற சந்தேகம் எழுவதாக திமுக சீனியர்கள் பேசிக்கொள்வது, ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது.

Advertisment

eps

இந்தச் சூழலில் தளபதிக்கு சம்மதம் எனில் அதிமுகவை உடைக்க முடியும் என்று செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாராம். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் நல்ல நட்பில் இருக்கிறார்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரியப் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் அமைச்சர்கள் சிலரும் எடப்பாடியோடு முரண்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசினால் நம் பக்கம் வர அவர்கள் தயங்க மாட்டார்கள். செந்தில்பாலாஜிக்கு கட்சியில் பதவியும் தேர்தலில் சீட் கொடுத்து ஜெயிக்க வைத்திருப்பது அதிமுகவினருக்கு நம் மீது நல்ல நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் தேவையான எம்எல்ஏக்களை நம்ம பக்கம் இழுப்பதன் முலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டலாம். நாம் அமைதியாக இருந்தால் இந்த ஆட்சி இன்னும் இரண்டு வருடத்திற்கு நீடிக்கும் என்று சீனியர்கள் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர்.

இதற்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் தர, அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்கிறார்கள் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள். இந்த திட்டம் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். 15 எம்எல்ஏக்கள் வரை இழுக்க முயற்சி நடக்கிறது. தற்போது வரை 7 எம்எல்ஏக்கள் திமுக வலையில் விழுந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி உளவுத்துறை அதிகாரிகளிடம் அதிக நேரம் விவாதித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஆட்சியை கலைக்க திமுகவுக்கு உதவும் அதிமுக எம்எல்ஏக்கள் யார் என விசாரித்திருக்கிறார். அந்த சந்தேகப்பட்டியலில் 30 எம்எல்ஏக்கள் வந்தனர். இவர்களை கண்காணிக்கும்படி உளவுத்துறையை கண்காணிக்க உத்தரவிட்டார். மேலும் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க நினைக்கும் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோரையும் கண்காணிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்துதான் அமைச்சர்கள், மா.செக்கள், எம்எல்ஏக்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடம் விசாரித்தார். இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறது திமுக. இரண்டு வருடம் ஆட்சி நீடிக்க ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் பேசினேன். வலிமையான கூட்டணி இருந்தும் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பொதுமக்கள் ஏற்கவில்லை. கூட்டணி பலமாக இருந்தாலும் தோழமை கட்சிகளின் வாக்குகளே நமக்கு விழவில்லை. இந்த கூட்டணி வேண்டுமா என்று மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறினார்களாம். அதற்கு எடப்பாடி பழனிசாமி, போனது போகட்டும். அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை பாருங்கள். திமுக பக்கம் யாரும் நீங்கள் போகமாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து உங்களை அணுகுவார்கள். அந்தப் பக்கம் யாரும் சாய்ந்துவிடக்கூடாது. உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், உளவுத்துறை கொடுத்த சந்தேகப்பட்டிலில் ஈருந்த எம்எல்ஏக்களிடம் தனியாக போனில் பேசியிருக்கிறார். அவர்களிடம் எந்த கோபத்தையும் காட்டாமல் சில உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். அதற்கு சில எம்எல்ஏக்கள் அவருக்கு சாதமாக பேச சற்று நிம்மதி அடைந்துள்ளார்.

Tamilnadu assembly MLA Support admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe