Advertisment

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம்... (படங்கள்)

Advertisment

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் சு.வெங்கடேசன்உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேடையில் இருந்த தலைவர்கள் 'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு' என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற 'மாஸ்க்' அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

farmers bill
இதையும் படியுங்கள்
Subscribe