ADVERTISEMENT

ஏழைகளின் வலி என்னவென்று தெரியுமா? பழங்களைத் தூக்கி எறிந்த ஆணையருக்கு திமுக எம்.பி கடும் கண்டனம்!

11:24 AM May 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வாணியம்பாடி பகுதிகளில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்தத் தள்ளுவண்டியில் உள்ள பழங்களைத் தூக்கி எறிந்தும், தள்ளுவண்டிகளைக் கவிழ்த்தும் அந்த வியாபாரியிடம், ஆணையர் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆணையர் நடவடிக்கை குறித்து மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா நடந்துகொள்வது? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை என்று கூறிவருகின்றனர்.


இந்த நிலையில் திமுகவின் தருமபுரி எம்.பி டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த அதிகாரிக்கு ஏழைகளின் வலி என்னவென்று தெரியுமா அவர்கள் உத்தரவை மீறி பழங்கள் விற்றிருந்தாலும்., சொல்லுவதற்கு ஒரு முறை உண்டு. இந்த அதிகாரி செய்தது கொஞ்சமும் சரி அல்ல. மிகவும் கண்டனத்துக்குரியது. இவர் மன்னிப்புக் கோராவிட்டால், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT