Advertisment

ஆட்சேபனை இல்லா நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லாதஇடங்களில் வசித்துவரும் மக்களுக்கு ‘வீட்டுமனைப் பட்டா’ வழங்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலருடன் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.