சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒரு முதியர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
#இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல்.
எங்க @rajinikanth sir ஆள காணோம்.
Gate அ திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம்,
அதே gate அ முடி,முடித்து வைக்கவும் தயங்காது. pic.twitter.com/DezuI8Y7sa
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 14, 2020
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் குறித்து திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க ரஜினிகாந்தை ஆள காணோம். கேட்டை திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே கேட்டை முடித்து வைக்கவும் தயங்காது என்று கூறியுள்ளார். திமுக எம்.பியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.