Advertisment

"வைகோவையே நாங்கள் தூக்கி எறிந்தோம்" - ஆர்.எஸ்.பாரதி பேட்டி 

RS Bharathi

கட்சிக்கு யார் வந்தாலும், யார் போனாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisment

திமுக எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த அவர், திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போன போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. தேம்ஸ் நதியைப் போல திராவிட முன்னேற்ற கழகம் 70 வருடங்களாக போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் பல நூறாண்டுகள் போகும்" எனத் தெரிவித்தார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe