DMK releases list of third phase candidates

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. தேமுதிக, அதிமுக கட்சிகள் சார்பில் நேற்று வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகிவந்த நிலையில், திமுக தனது முதல் மற்றும் இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், இன்று தனது மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியில், ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகாட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, திருப்போரூர் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, திருப்பெரும்புதூர் பேரூராட்சி ஆகியவற்றுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி மத்திய மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சி, இலால்குடி நகராட்சி, பூவாளூர் பேரூராட்சி, கல்லக்குடி பேரூராட்சி, புள்ளம்பாடி பேரூராட்சி, சிறுகமணி பேரூராட்சி ஆகியவற்றுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

திருச்சி தெற்கு மாவட்டத்தில், திருச்சி மாநகாரட்சி, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி, கூத்தைப்பார் பேரூராட்சி ஆகியவற்றுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி வடக்கு மாவட்டத்தில், துறையூர் நகராட்சி, முசிறி நகராட்சி, மேட்டுப்பாளையம் பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி, தொட்டியம் பேரூராட்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி,பாலகிருஷ்ணாம்பட்டி பேரூராட்சி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி, ச. கண்ணனூர் பேரூராட்சி, மண்ணச்சநல்லூர் பேரூராட்சி ஆகியவற்றுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தென்காசி தெற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.