Advertisment

திமுகவில் இளைஞர்களை குஷிப்படுத்த அதிரடி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு திமுகவின் பிரச்சார வியூகம் மற்றும் இளைஞர்களின் களப்பணி முக்கியமானதாக கூறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின் போது உதயநிதி பிரச்சாரம் இளைஞர்களை கவர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தி.மு.க.வில் உள்ள 30 வயதுக்கு குறைவான இளைஞர்களை குஷிப்படுத்தவும், 25 வயதுக்கு குறைவான ஆட்களை ஈர்க்கவும் தி.மு.க. இளைஞரணி செயலாளரா உதயநிதியை நியமிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட எல்லாரும் பச்சை கொடி காட்டிவிட்டனர்.

Advertisment

dmk

ஏற்கனவே தி.மு.க.வின் பல மாவட்ட அமைப்புகளிலும் உதயநிதிக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், இளைஞரணி பொறுப்பை கொடுப்பதா திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. சிங்கப்பூர் பயணத்தை முடிச்சிட்டு வந்த ஸ்டாலின் இது குறித்து கட்சியின் சீனியர்களிடமும் விவாதிச்சிருக்காரு. அவங்களில் பலரும், விமர்சனம் பண்றவங்க பண்ணிட்டுப் போகட்டும். தேர்தல் களத்தில் உதயநிதி அணுகுமுறை பலரையும் ஈர்த்து வெற்றி பெற்றிருக்கு. பதவி கொடுப்பதற்கு இதுதான் சரியான தருணம்னு சொல்ல, வெகு விரைவில் உதயநிதியை இளைஞரணி செயலாளராக்கலாம்னு அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment
annaarivalayam elections stalin udhayanidhistalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe