Advertisment

முன்னாள் முதல்வர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, மெரினாவில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பேரணியாக சென்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். சென்னை வாலாஜா சாலையில் துவங்கிய பேரணி பேரலையாக மெரினா கடற்கரையை வந்தடைந்தது.