மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக திமுக சார்பில் சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி!!!

இன்று மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

shanmugam dmk

இதைத்தொடர்ந்து சண்முகம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

மாநிலங்களவை தேர்தலுக்கு என்னையும், வழக்கறிஞர் வில்சனையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். திமுக முன்னாள் தலைவர் கலைஞரால் 2016ம் ஆண்டு அடுத்த முறை உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொன்ன வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இது தொழிலாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

rajaya sabha SHANMUGAM stalin
இதையும் படியுங்கள்
Subscribe