Advertisment

அதிரடியாக திமுக போட்ட தீர்மானம்... டென்ஷனில் அதிமுக அரசு... விமர்சித்த பாஜகவினர்!

தி.மு.க. அரசியல் செய்கிறது என்று எடப்பாடி குற்றம் சாட்டியிருந்தார். இது பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் எதுவும் செய்யாமல் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர். அது போல் அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்து வந்தார்கள். அதற்கு தடை போட்டது எடப்பாடி அரசு. இதனால் தி.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஹைகோர்ட்டுக்குச் சென்றனர். தி.மு.க. எம்.பி. வில்சன் ஆஜராகி வாதாடினார். நிவாரண உதவிகளைத் தடுப்பதை ஏற்காத உயர்நீதிமன்றமும், நிவாரணங்களை வழங்க அனுமதி வாங்கத் தேவையில்லை. தகவல் சொன்னால் போதும் என்று தீர்ப்பு கொடுத்தது. அதுபோல, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், இதில் அரசியல் செய்ய இடமில்லை என்று எடப்பாடி மறுத்துவிட்டார். அதனால்தான் தி.மு.க. சார்பில் தோழமைக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.

Advertisment

admk

மேலும் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்துக்கு தேனாம்பேட்டை காவல்நிலையம் அனுமதி மறுத்தது. எடப்பாடி இதில் ரொம்ப கறாராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், ஸ்டாலினும் உறுதியாக இருந்து வீடியோ கான்பரன்சிலேயே கூட்டம் நடத்தி தீர்மானமும் போட்டிருக்கிறார். அதில், மக்களுக்கு 5000 ரூபாய் தர வேண்டும் என்று போடப்பட்ட தீர்மானத்தை ஏற்கனவே வலியுறுத்திய ப.சிதம்பரம் வரவேற்றார். அதேநேரத்தில், கரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் தர வேண்டும் என்கிற தீர்மானம் ஆளுந்தரப்பை டென்ஷனாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.க. தரப்பினரும் இதை விமர்சித்து சமூக வலைத் தளங்களில் ட்ரோல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றனர்.

Advertisment
admk coronavirus eps issues stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe