Advertisment

விழுப்புரம்: மின் கட்டணத்தை குறைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

Advertisment

மின் கட்டண உயர்வு, மின் ரீடிங் எடுப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் ஆகியவற்றை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கான இலவச மின் திட்டத்தை ரத்து செய்யும் புதிய மின்சார சட்டதிருத்தம் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று (ஜூலை21) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளின் முன் கருப்புகொடி ஏற்றி, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக,முடிவு செய்யப்பட்டது.

நேற்று (ஜூலை 21)விழுப்புரத்திலும் தமிழக அரசின் மின் கட்டண மோசடியை கண்டித்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

செந்துறை வடக்கு ஒன்றிய திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில்ஒன்றிய கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில், கோட்டைக்காடு கிளைக்கழக செயலாளர் பெ. அகத்தியர், பிரதிநிதி கோ. இரவிச்சந்திரன்,கச்சிராம்பேட்டை செயலாளர் க. இராமசாமி, ஜெயராமன் ஆசிரியர் (ஓய்வு), தெய்வ. ஸ்டாலின், கொ. வேலு,இரா. வெங்கட்ராமன், ப.பழனிவேல், மற்றும் இர. ஆனந்த்ராஜ், இர. அஜித், விஜய்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Ponmudi villupuram EB bill DMK protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe