சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச இருக்கிறார்கள். மேலும் இவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தையும் பார்வையிட இருக்கிறார்கள்.

mkstalin 321

இந்நிலையில் நாளை மறுநாள் வர இருக்கும் சீனா பிரதமர் ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள "கிராண்ட் சோழா" நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். அன்று இரவு விருந்திற்கு பல்வேறு தலைவர்கள் சீன அதிபரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு மட்டும் இரவு விருந்திற்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது.

Advertisment

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் சீன பிரதமர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் இரவு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் பேச இருப்பதை சமீபத்தில் வரவேற்று மகிழ்ந்தார் மு.க ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.