சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், தேர்தலுக்குத் தயாராகும் விதமாக சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தயாநிதிமாறன், டி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி சிவா, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் பங்கேற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை கூட்டம், தி.நகர் பத்மாவதி கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.