ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளைச்சிறப்பிக்கும் விதமாக தி.மு.க. சார்பில், 2,000 கட்சி உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.