Advertisment

அதிமுக மீது திமுக கொடுத்த ஊழல் புகார்... குளோபல் மருத்துவமனை வழக்கு ட்ராப்? வெளிவந்த தகவல்!

dmk

நெடுஞ்சாலைத் துறையில் நடந்துகொண்டிருக்கும் ஊழல்கள் தொடர்பாக தி.மு.க. தரப்பிலிருந்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் விஜயகுமாருக்குப் புகார் அனுப்பியுள்ளனர். இருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர். காரணம், இப்படிப்பட்ட புகார்கள் வந்தால் நடவடிக்கை வேண்டாம் என்று கோட்டையிலிருந்து உத்தரவு வருவதாகச் சொல்கின்றனர்.

Advertisment

மேலும் இந்தப் பரபரப்புக்கு நடுவில் சென்னை குளோபல் மருத்துவமனை மீதான வழக்குகளை எடப்பாடி அரசு, திடீர் என்று டிராப் பண்ணியிருப்பதாகச் சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தனது ஏஜண்டுகளாக்கிக் கொண்டு, தனியார் மருத்துவமனையான குளோபல், ஆள் பிடித்த விவகாரத்தை நமது நக்கீரன்தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்த மருத்துவமனைத் தரப்பு மீது வழக்குகளும் பதிவானது. இந்தச் சூழலில், மருத்துவமனைதரப்புக்கு நெருக்கமான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து பிரஷர் வந்ததால், குளோபல் மீதான வழக்குகள் டிராப் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு, தமிழக அரசுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதிகளை, வெங்கையா நாயுடு மூலம்தான்எடப்பாடி அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும்சொல்கின்றனர்.

Advertisment

admk eps Global Hospital incident stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe