தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழுச் செயலாளராக இருந்த மாஜி செல்வகணபதியை, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஸ்டாலின் நியமித்து இருந்தார். இது எடப்பாடிக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதனால் எடப்பாடியின் செல்வாக்கை குறைப்பதற்கு முன்னாள் அதிமுக நிர்வாகியான செல்வகணபதியை திமுக தலைமை நியமித்து இருப்பதாக சொல்கின்றனர். திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்களால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

dmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக டி. பாபு நியமிக்கப்படுகிறார். மேலும் கோவை மாநகர் மாவட்டம், சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக சுந்தரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்களால் கட்சியினர் பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.