Advertisment

திமுகவின் அரசியல் மூவ் மாறுகிறதா?

காங்கிரசும்,பா.ஜ.க.வும் இல்லாத மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வோட ஸ்லீப்பர் செல்னு பலரும் சந்தேகப்படுற நிலையில், 13-ந் தேதி சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திச்சதை ஒட்டுமொத்த இந்திய அரசியலும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சந்திப்புக்கு நேரம் கேட்டப்ப ஒப்புக்கொள்ளாத ஸ்டாலின், இப்ப எப்படி ஒப்புக்கொண்டாராம்? ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்னு அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின்தான். இப்ப தி.மு.க. ரூட் மாறுதா? அப்படி இப்படினு அரசியல் கட்சியினரிடையே சர்ச்சையையும்,விவாதத்தையும் ஏற்படுத்தியது.

Advertisment

dmk

இது பற்றி விசாரித்த போது சந்திப்புக்காக சந்திரசேகர ராவ் தரப்பு, விடாம முயற்சி பண்ணி, ஸ்டாலின் மருமகன் சபரீசனைப் பிடித்து, வழக்கமான சந்திப்புதான்னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிடிச்சி. இருந்தாலும், தி.மு.க. தரப்பில் இது பற்றி காங்கிரஸ் மேலிடத்திடம் சொல்லியிருக்காங்க. அங்கேயிருந்தும் க்ரீன் சிக்னல் வந்திடிச்சாம். காரணம், சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் காங்கிரசுக்காக முயற்சிகள் எடுத்துட்டு வந்தாலும், சந்திரசேகரராவையும் ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டியையும் சரிபண்ணி வச்சிக்கணும்ங்கிற அசைன்மெண்ட்டை ப.சிதம்பரம்கிட்ட காங்கிரஸ் தலைமை கொடுத்திருக்கு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சலீல்ங்கிறவர் மூலமா சுப்பிரமணிய சாமி ஒரு சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறார். அதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம்னு தெரிஞ்சுதாம். அதனால பா.ஜ.க. தலைமையிலிருந்து சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இவங்களை இழுக்க மூவ் நடக்க, அதைத் தடுப்பதற்காகத்தான் ப.சி.யிடம் புது அசைன்மெண்ட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை.

Advertisment

dmk

அதனால ஸ்டாலின்-ராவ் சந்திப்பில் காங்கிரசுக்கு நெருடல் இல்லைன்னு சொல்றாங்க. மேலும் சந்திரபாபு நாயுடு முயற்சிகள், அது இன்னொரு பக்கம் நடக்குது. ஏற்கனவே 21-ந் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, ரிசல்ட் வராமல் யார்கிட்ட என்ன பேசி, உத்தரவாதம் வாங்க முடியும். அதனால, மே 23-க்குப் பிறகு கூடலாம்னு நாயுடுகிட்ட சொல்லிட்டாரு. நாயுடுவும் மம்தாகிட்ட, அடுத்த பிரதமர் தேர்வு உங்களை மையமா வச்சி நடக்கலாம். வேறு ரூட்டில் போயிடாதீங்கன்னு சொல்லியிருக்காரு இப்படி அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

byelection Chandrashekar Rao loksabha election2019 stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe