Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ.வை கண்டித்து திமுகவினர் மனு..! 

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

DMK people  condemns ADMK MLA ..!

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் நகரத்தில் முக்கிய வீதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், அந்த வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி பொறியாளர் மகாராஜனிடம் விளக்கம் கேட்டனர். 

 

அப்போது, 144 தடை உத்தரவு இருக்கும்போது அதிமுகவினருக்கு மட்டும் ஊர்வலமாக செல்வதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என கேட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நகராட்சி சார்பில் நகரத்தில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற சாலையாக உள்ளது என்றும் சாக்கடை அடைப்புகளை மூடிவிட்டு சாலை போட்டதால் சாலை சேதமாகும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனு அளித்துள்ளனர். 

 

இந்நிகழ்வின்போது, சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திமுகவினர் இருந்தனர். திமுகவினர் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்