தி.மு.க. தேர்தல்: இன்று வேட்பு மனு பெறலாம்!

dmk party nomination start for today

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று (02/09/2020) வேட்பு மனு பெறலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரூபாய் 1,000 கட்டணம் செலுத்தி வேட்பு மனுவை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்பு மனு கட்டணமாக ரூபாய் 25,000 செலுத்த வேண்டும். பூர்த்திசெய்த வேட்பு மனுக்களை நாளை (03/09/2020) காலை 10.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை தாக்கல் செய்யலாம். நாளை மறுநாள் (04/09/2020) காலை 11.00 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும்; செப்டம்பர் 05- ஆம் தேதி மதியம் 01.00 மணிவரை மனுவை திரும்ப பெறலாம். செப்டம்பர் 5- ஆம் தேதியன்று மாலை 04.00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்". இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9- ஆம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

anna arivalayam mk stalin party
இதையும் படியுங்கள்
Subscribe